நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திம ஜயசிங்க பிணையில் விடுதலை!
இரண்டாம் இணைப்பு
பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, 10 லட்சம் ரூபா விதமான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கொழும்பு – கோட்டை பொலிஸாரினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் நிகழ்வொன்றை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.