பெருந்தொகை ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
Police
Mannar
SriLanka
Ice Iddiction
By Chanakyan
மன்னார் - முருங்கன் பிரதேசத்தில் 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளைக பிறப்பித்த போதும், அதை மீறி பாரவூர்தி பயணித்துள்ளது.
இதையடுத்து துரத்திச் சென்ற காவல்துறையினர் சோதனை நடத்திய போதே போதைப்பொருளைப் மீட்டுள்ளனர்.
இதில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.