ரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பிணை!
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மெய் பாதுகாப்பாளர் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, காவல்துறையினரால் நேற்று (30) விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று (01) கொழும்பு கொம்பனித்தெரு காவல் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ரணில் விக்ரமசிங்க வெளியே வந்தபோதே, அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் அனுமதி
சம்பவத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரியான A.H. மகேஷ் ரஞ்சன், தற்போது நாரஹேன்பிட்டி காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரைத் தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில், சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |