அதிகாரி இடமாற்றத்தால் வெடித்த மோதல்...! பெண் நிர்வாகி மீது ஊழியர்கள் தாக்குதல்
நாராஹேன்பிட்டியில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் திறமை அபிவிருத்தி நிதியத்தின் (Skills Development Fund) பெண் பொது மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள திறமை அபிவிருத்தி நிதியத்தின் தலைமை அலுவலக வளாகத்திற்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பொது மேலாளரின் சர்வாதிகார நிர்வாகப் போக்கு மற்றும் ஊழியர்களுடனான தொடர்ச்சியான உட்பூசல்கள் காரணமாக ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வந்துள்ளது.
அண்மையில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை அவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்தமையே இந்த எதிர்ப்பு தீவிரமடைந்து இத்தாக்குதலுக்கு உடனடியாக வழிவகுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து நாராஹேன்பிட்டி காவல்துறையினர் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் இது நிறுவனத்திற்குள் நிலவிய உட்பகை காரணமாக நடந்த நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், நாராஹேன்பிட்டி கால்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |