யாழில் போதைமாத்திரைகளுடன் கைதான மூவருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Raghav
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைமாத்திரைகளுடன் ஆனைக்கோட்டையில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூவரையும் ஜீன் 18ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க யாழ்ப்பாணம் (Jaffna) நீதிவான் நீதிமன்றம் இன்று (10) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போதை மாத்திரை மற்றும் வாளுடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வர் யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் நேற்று(09) கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை அனுமதி
இதேவேளை, வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறை அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 22 மணி நேரம் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்