அரசியல் பழிவாங்கலுக்கான கைதுகள் அரசிற்கு எதிரானதாக அமையும் : எச்சரிக்கும் மகிந்த
அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சMahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் நியமனம் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட கட்சியின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்கள் குறித்து பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மகிந்த ராஜபக்சவுக்கு எடுத்துரைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு இலக்கிடப்பட்ட வளர்ச்சியை அடையாது என்று எதிர்வுகூறப்பட்டுள்ளமை அதிருப்தியளிக்கின்றது.
அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை பயன்படுத்திக் கொள்கிறது.
அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கே எதிரானதாக அமையும். மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் சாதகமான தீர்மானத்தை எடுக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
