அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள்: டக்ளஸ் வெளிப்படையாக கூறிய அந்த விடயம்..!
யாருக்கு எதிராகவேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவது குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் தாக்கம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, “ உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஓரே நாளில் நடத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும்.
எனவே, குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் எடுக்க வேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
