கனடாவில் அதிகரிக்கும் புலம்பெயர் மாணவர்களின் வருகை: எடுக்கப்பட்டுள்ள முடிவு
புதிய சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது.
சர்வதேச மாணவர்கள் கனடா நாட்டின், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பங்காற்றி வந்துள்ளார்கள்.
கனேடிய அரசாங்கம்
ஆனால், அண்மைக்காலமாக கனடா நாட்டில் சர்வதேச மாணவர்களின் அதிகரித்துள்ள வருகையானது, கனேடிய அரசாங்கத்திற்கு பெரும் சவாளை வழங்கியுள்ளது.
கனடாவின் சில கல்வி நிறுவனங்கள், தமது வருமானத்தை அதிகரிப்பதற்காக அண்மைக்காலமாக அதிகளவிலான சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருகின்றது.
இதில் பல மாணவர்கள் தமது கல்விப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய தேவையான வசதிகள் இன்றி கனடாவுக்கு வருகை தருவதால் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.
காரணம்
மேலும், தொடர்ச்சியாக அதிகரிக்கும் சர்வதேச மாணவர்களின் வருகையால், கனடாவில் தங்குமிட வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளில் இறுகிய நிலை ஒன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்காளால் கனேடிய அரசானது, சர்வதேச மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |