விரைவில் வழமைக்குத் திரும்பும் அறுகம்பைக்குடா சுற்றுலா பிரதேசம்
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறுகம்பைக்குடா, சர்வதேச மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகளின் வருகையினால் விரைவில் வழமைக்குத் திரும்பும் என உல்லாசப் பயண ஹோட்டல் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக அறுகம்பைக்குடா, உல்லாசப் பயணிகளின்றி வெறிச்சோறிக் காணப்படுகின்றன.
சர்வதேச ரீதியில் கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டுக்குப் பெயர்பெற்று விளங்கும் அறுகம்பைக் குடாவுக்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வருகை தருவது வழக்கமாகும்.
சர்வதேச உல்லாசப் பயணிகளைப் போன்று உள்ளுர் உல்லாசப் பயணிகளும் அறுகம்பைப் பிரதேசத்திற்கு அதிகளவில் வருகைதருவர்.
ஆனால் வைரஸ் பரவல் நிலை, பயணக்கட்டுப்பாடு, இதர சுகாதார வழிகாட்டுதல்கள் காரணமாக உள்ளுர் பயணிகளும் வருகை தரவில்லை.
உல்லாசப் பயிணிகளின் வருகை இல்லாததைத் தொடர்ந்து வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது நாடு கொவிட் 19 நிலைமைகளிலிருந்து விடுபட்டு, வழமைக்குத் திரும்பி வருகின்றது.
அதேபோன்று, உல்லாசப் பயணத்துறையும் விரைவில் சீரடையும் என்ற நம்பிக்கை வெளியிடக்கட்டுள்ளது.