புளியங்குளம் வீதி அபிவிருத்தி பணி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
அண்மையில் சர்ச்சைக்குள்ளான புளியங்குளம் வீதி அபிவிருத்தி பணி தொடர்பில் ஆராய்வத்ற்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறித்த பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் இன்று (12-10-2026) குறித்த பகுதிக்கு சென்ற அவர் அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
வேலைத்திட்டங்கள்
மேலும் தெரிவித்த அவர், “திருகோணமலை மாவட்டித்தினை பொறுத்தவரையில் குறிப்பாக 659 வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலகத்தின் ஊடாகவும் 551 வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணசபை ஊடாகவும் 1165 வேலைத்திட்டங்கள் ஏனைய அமைச்சுக்களின் ஊடாகவும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோடு அதற்காக அரசாங்கத்தின் 12802.21 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் இது முன்னெடுக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க பலதரப்பட்ட சக்திகள் அரசினது வேலைத்திட்டங்களில் இனவாத பாரபட்சம் காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக போலியான அறிக்கைகளை வெளியிட்டு இந்த அரசாங்கமானது பக்கச்சார்பாக செயற்படுவதாக கருத்து வெளியிடுகின்றனர்.
இந்த வீதி அபிவிருத்திப் பணிகளின் ஒதுக்கீடு தொடர்பில் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட கடிதத்தில் பிழைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதனை தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாறாக மக்களை குளப்பும் வகையிலான செயற்படுகளில் ஈடுபடுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாக இருப்பினும் தடைபட்டிருக்கும் வேலைத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும் அதனை தாம் உறுதிசெய்வதாகவும் அவர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |