ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை கோட்டாபய-மஹிந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதா?
srilanka
gotabhaya rajapaksa
asath sali
By Vasanth
ஒரே நாடு ஒரே சட்டம் என தெரிவித்து வரும் கோட்டா - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இவ்வளவு நாட்களில் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதா என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, இஸ்லாமிய திருமணச் சட்டம் குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்துக்கும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இராணுவத்தினரின் தலையீட்டுடன் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கனவே கூறிய கருத்து தற்போதும் பொருந்துகின்றது என கூறியுள்ள அசாத் சாலி, தாம் அடைந்துள்ள தோல்வியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.