நிர்வாணமாக நிற்கத் தயார் : விடுக்கப்பட்ட சவால்
Sri Lanka
India
Egg
By Sumithiran
தரம் குறைந்த முட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.அசேல சம்பத் தெரிவித்தார் .
இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் அதிக நபர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நிர்வாணமாக நிற்கத் தயார்
தனது குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிக்கப்பட்டால் பொரளை சந்தியில் நிர்வாணமாக நிற்கத் தயார் எனவும், தனது குற்றச்சாட்டுகள் சரியென நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இணைய ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி