எழுச்சி பெற்ற சீனாவால் ஆசியாவே மாற்றம் பெற்றுள்ளது – பிரதமர் மஹிந்த பெருமிதம்

srilanka colombo china mahinda rajapaksha
By Sumithiran Feb 17, 2022 03:59 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க அவர்களினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.

கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. பௌத்தம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வளர்ந்துள்ளது. பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து 1949 இல் புதிய சீனா உதயமாகியது.

சீனத் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளைப் பேணுவதற்கு கலாநிதி சுகீஸ்வர விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டார். 1945 இல் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவப்பட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அது பரிஸில் நடைபெற்றது. சீன தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது.

சீனாவிற்கு விஜயம் செய்த முதலாவது அரசியல் பிரதிநிதிகள் குழுவில் பிலிப் குணவர்தன, எஸ்.டி.பண்டாரநாயக்க, எட்மன் சமரக்கொடி, எஸ்.ஜி.எஸ்.ரத்னவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன் பின்னர் இலங்கை - சீன நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. வண. உடகெந்தவல சிறி சரணங்கர தேரர், குசுமா குணவர்தன, தேஜா குணவர்தன, பீட்டர் கென்மன், எஸ்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினரே இதற்கு தலைமை தாங்கினர்.

இறப்பர் அரிசி ஒப்பந்தம் (1952) நட்பின் மற்றொரு மைல்கல் என்று கூறலாம். உண்மையில் 1956 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே நட்பிற்கு சிறந்த அடித்தளம் இடப்பட்டது. அமரர் பண்டாரநாயக்க வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தினார்.சோசலிச அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார். இடதுசாரி இயக்கம், தொழிற்சங்க இயக்கம் மற்றும் இளம் மாணவர் இயக்கம் ஆகியவை சீனாவை அங்கீகரிப்பதற்காகவும், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய போராட்டங்களை நடத்தின. நான் தர்ஸ்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது அந்தப் பேரணிகளில் கலந்துகொண்டேன்.

சீனாவுக்கான முதல் தூதுவர் வில்மட் ஏ பெரேரா என்பது எனக்கு நினைவிருக்கிறது. சூரியகாந்தி மலர் வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். அதன் பிறகு ஏ.பீ. பெரேரா, ரொபர்ட் குணவர்தன, வில்லியம் கொபல்லாவ ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினர். இதன்போது டி.பீ.சுபசிங்க விசேட பங்கு வகித்தார்.

1978க்குப் பின்னர் சீனா புதிய பொருளாதார உத்திகளைக் கையிலெடுத்தது. 1978 மற்றும் 2010 க்கு இடையில் மிக விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த தசாப்தத்தில் சீனா இரண்டு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதலில் புதிய பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையும் அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரண்டாவது திட்டம் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம். இதனூடாக 800 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

உலக வரலாற்றில் இது ஒரு வரலாறு காணாத வெற்றியாகும். இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது.

அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். சீனாவின் தற்போதைய அரச தலைவர் சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.

2012 ஆம் ஆண்டு முதல் சீன அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டை குறிக்கும் வகையிலான விழாவில் ஒன்லைனிலும் பங்கேற்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 2022ல் நடைபெற உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சீன - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டோம். எங்கள் நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம். சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது எமது எதிர்பார்ப்பும் பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீ.சு.க. தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஜாதிக நிதஹஸ் பெரமுன தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ.சென்ஹோங், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா மஹஜன கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியூ குணசேகர, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க, ஆண்டு விழாக் குழுவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.டீ.என்.வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025