மாணவர்களை நாக்கால் நக்கி சோற்றை சுத்தம் செய்ய வைத்த அதிபர் - எடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை
மாணவர்கள் தமது மதிய உணவை முடித்துவிட்டு மேசையில் விழுந்து கிடந்த சோற்றை நாக்கினால் நக்கி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் பணித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாத்தறை கொடௌட மகா வித்தியாலய அதிபர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டதுடன், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பாடசாலை ஊழியரால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
இந்த சம்பவத்தை பாடசாலையின் ஊழியர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
உடனடியாக அதிபர் இடமாற்றம்
சம்பவம் தொடர்பில் தென் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணை முடியும் வரை குறித்த அதிபர் தற்காலிகமாக மாத்தறை பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

