வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை
Colombo
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
Money
By Sathangani
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண்18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.
இன்றைய (15) வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
1.29 பில்லியன் ரூபா
இன்றைய நாளின் இதுவரையான மொத்த வர்த்தகப் புரள்வு 1.29 பில்லியன் ரூபாவாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்தது.
நேற்றைய வருவாய் 9.49 பில்லியன் ரூபாவாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

