விடுமுறையில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
விடுமுறையில் வீட்டுக்கு சென்ற காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி அவரிடமிருந்து இலட்சக்கணக்கான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மிரிஹான காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர் மீதான தாக்குதலை அடுத்து அவரிடமிருந்து 03 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஐந்து சந்தேக நபர்கள் கைது
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் நேற்று(24) கைது செய்யப்பட்டதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 - 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், துனுவாங்கிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
தாக்குதலில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேக நபர்களை இன்று(25) நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |