மாணவர்கள் மீதான தாக்குதல் - அதிபர் பணி இடைநீக்கம்
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனிய குங்கமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என மேல் மாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் கூறியுள்ளார்.
விளக்கமறியல்
இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த அதிபர் மற்றும் மில்லனிய காவல் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியையின் பேர்ஸ் மாயம்
பாடசாலையில் ஆசிரியை ஒருவரின் பேர்ஸ் காணாமற் போனதை அடுத்து தரம் 5 மாணவர்கள் மீது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடும் விசாரணை நடத்தியதாகவும் பின்னர் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் அவர்கள் வந்து மாணவர்கள் மூவருக்கு கைவிலங்கு இட்டு அழைத்து சென்று மின்சாரம் பாய்ச்சி தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
