கடமைக்கு சென்ற காவல்துறையினர் மீது கத்திக் குத்து - ஒருவர் கைது!
Sri Lanka
By Pavan
எல்ல, கொடுவெல பகுதியில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (30) அதிகாலை 01.30 மணியளவில் எல்ல காவல் நிலையத்தின் ஐந்து உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புக்காகச் சென்ற போது அவர்களில் இருவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 38 மற்றும் 29 வயதுடைய இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் எனவும், அவர்கள் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 16 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்