தமிழர் பகுதிகளிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை!
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் சிறிலங்காவின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தலையிட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாரிய கடன் வலைகளுக்குள் சிக்கியுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பிரச்சினையிலிருந்து மீண்டு வெளிவர அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண் தலைமையிலான குடும்பங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் தலைமையிலான குடும்பங்கள் இருக்கின்றன.
விடுதலை புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான போராளி : எதிரியே பாராட்டும் தலைவர் என்கிறார் மனோ கணேசன்! (காணொளி)
வடக்கு-கிழக்கு ஒரு போர் பூமியாக இருந்தது. அங்கு பல அழிவுகள் இடம்பெற்றன.
இதன் போது, மக்களின் வீடுகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
குடியிருப்பு பிரச்சினை
இந்த நிலையில், போர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து, மக்களின் குடியிருப்புக்கள் பாரிய பிரச்சினையாக மாறியது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க, சிறிலங்கா அரசாங்கம் சில திட்டங்களை முன்வைத்தது. இதில் பல திட்டங்கள் நிதியை மையமாக கொண்டிருந்தன.
எனினும், குறித்த நிதி பகுதி பகுதியாக வழங்கப்பட்டதால் அவை போதுமானதாக இருக்கவில்லை. இதனால் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.
நிதி நிறுவனங்களின் ஆட்சி
வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற பேரை தொடர்ந்து, நிதி நிறுவனங்கள் குறித்த பகுதியை ஆட்சி செய்தன.
வறுமை காரணமாக மக்கள் இந்த நிதி நிறுவனங்களிடம் உதவியை கோரியிருந்தார்கள். இதன் விளைவாக, கடனை மீள செலுத்த முடியாத தரப்பினர் தற்கொலை செய்து கொண்டனர்.
இவ்வாறாக கடன் வலைகளுக்குள் சிக்கியுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |