செல்வந்தர்களாக போகும் 7 ராசிகள் : நாஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சிக்குரிய கணிப்புக்கள்
Astrology
By Shalini Balachandran
உலகில் எதிர்காலத்தில் கணித்துக் கூறும் பல தீர்க்கத்தரசிகள் உள்ளனர் அதில் பிரபலமானவராக நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) காணப்படுகின்றார்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டில் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், குறிப்பாக நிதி ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
நோஸ்ட்ராடாமஸ் கணிப்பின் அடிப்படையில், எந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டு செல்வந்தர்களாக மாறப்பபோகின்றார்கள் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்
01. மேஷம்
- 2025 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களின் தைரியமும், உறுதியும் நிதி விஷயங்களில் சிறப்பான முடிவெடுக்க உதவும்.
- இந்த ஆண்டில் தலைமைத்துவ பண்புகள் மேம்பட்டு, முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- இதை பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடையலாம்.
- ஆனால் திடீரென்று எந்த முடிவை எடுக்கும் போதும், சற்று கவனமாக இருக்க வேண்டும். திட்டமிடும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- இந்த ஆண்டில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குகள் நல்ல பலனைத் தரும்.
- விடாமுயற்சியால், இந்த ஆண்டில் நல்ல நிலையான மற்றும் செழிப்பான நிதி நிலையை அடையக்கூடும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
02. ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையாகவே உறுதியானவர்கள்.
- கடின உழைப்பாளிகள்.
- இந்த 2025 ஆம் ஆண்டில் கிடைக்கும் எந்த வாய்ப்புக்களையும் புறக்கணிக்காமல், திறம்பட பயன்படுத்திக் கொண்டால், யாராலும் எட்டமுடியாத உயரத்தை அடைவீர்கள்.
- புதிதாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் தொடங்குவதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம்.
- மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்பினால், நல்ல நிதி நன்மைகளைப் பெற்று, செல்வந்தர்களாக மாற வாய்ப்புள்ளதாக நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
03. மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் இரட்டைத்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள்.
- இது அவர்களின் ஆர்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது.
- இவர்களின் ஆர்வத்தினால் இவர்கள் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்து முடித்து, நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள்.
- புத்திசாலித்தனம் அவர்களுக்கு நிதி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் செல்வத்தை மிகுதியாகவும் பெருக்கும்.
- இருப்பினும், இவர்கள் பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- ஏனெனில் நிறைய சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- இந்த ஆண்டு மனதிற்கு உண்மையாக இருந்து புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால், வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடையலாம் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
04. சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைமைப்பண்புகளைக் கொண்டவர்கள்.
- இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், படைப்பாற்றலும் நல்ல நிதி நன்மைகளைத் தரும்.
- பணியிடத்தில் உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.
- ஆனால் நிறைய செலவு செய்வதைத் தவிர்த்திடுங்கள்.
- தைரியமான ஆனால் சிந்தனைமிக்க செயல்களை எடுக்கும் உங்கள் திறன் நீடித்த செழிப்பு மற்றும் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும்.
- மொத்தத்தில் மனதை ஒருமுகப்படுத்தி ஒரு வேலையை செய்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
05. துலாம்
- 2025 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்கள் ஏராளமான செல்வத்தைப் பெறுவார்கள்.
- கடினமாக உழைத்தால், உங்கள் தலைவிதியை மாற்றலாம்.
- உங்களின் படைப்பாற்றல் இந்த ஆண்டு பணமாக மாறும்.
- இந்த ஆண்டில் உங்களின் கனவு வாழ்க்கையை வாழ்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல வெற்றியுடன் முன்னேற்றத்தையும் காண்பீர்கள் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
06.மகரம்
- மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள்.
- உறுதியான ஒழுக்கம் கொண்டவர்கள்.
- நேர்வழியில் எதையும் செய்ய நினைப்பார்கள்.
- கடின உழைப்பாளிகள்.
- இப்படியான இவர்களின் குணத்தால் இந்த ஆண்டில் மகர ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- இந்த ஆண்டில் முயற்சிகள், பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு நல்ல பலனளிக்கும்.
- ரிஸ்க் எடுக்க இந்த ஆண்டு பயப்பட வேண்டாம்.
- ஏனெனில் இந்த ஆண்டில் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
07. மீனம்
- 2025 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்கள் தங்கள் உள்ளுணர்வை உணர்ந்து, தனது உள்ளுணர்வு சொல்வது போன்று நடப்பார்கள்.
- இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களைத் தேடி பணம் வேகமாக வராமல் போகலாம்.
- ஆனால் பொறுமையாக இருந்து, தொடர்ந்து கடினமாக உழைத்து வந்தால், நிச்சயம் நல்ல பலன்களைப் பெற்று, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்