நெருங்கும் சனிப் பெயர்ச்சி! பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்
சனி பெயர்ச்சி
2023 ஜனவரி 17ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனி பெயர்ச்சி நிகழப்போகிறது.
சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனிபகவான் பயணத்தால் யாரெல்லாம் பயணடையப்போகிறார்கள்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
கடகம்
கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது.
கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி பாதிப்பு ஏற்படுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம்.
எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு.
ஏழரை சனி காலத்தில் சனிபகவான் கொடுத்த சோதனைகளையே தாங்கி விட்டீர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாதா? கடவுளை நம்புங்கள் நிச்சயம் கை கொடுப்பார்.
மகரம்
பொதுவாகவே ராசியில் இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமரும் போது குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும்.
பண பிரச்சினையில் சிக்க வைக்கும். அதே நேரத்தில் ஏழரை சனியில் பாத சனி என்பதால் பதற்றம், பயத்தை குறைத்து மன நிம்மதியை தருவார்.
கும்பம்
பொதுவாகவே ராசியில் சனிபகவான் ஜென்ம சனியாக அமரும் போது சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும்.
ராசியில் அமரும் சனி ஜென்ம சனி உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.
மீனம்
12ஆம் இடம் விரைய ஸ்தானத்தில் சனி அமரும் போதே ஏழரை சனி ஆரம்பிக்கும்.
தேவையற்ற விரையங்களை கொடுக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். மீன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு முதல் ஏழரை ஆரம்பிக்கிறது.
மீன ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.
தேவையற்ற விரையங்களைத் தருவார் சனிபகவான். சுப விரையமாக மாற்றுங்கள்.
