அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில்1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபாய் வெளியிடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகள்
இந்நிலையில், குறித்த பயனாளிகள் நாளை முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறும் குடும்பங்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் உபாலி பன்னிலகே (Upali Pannilage) தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு மாணவர்கள் ஆளாகாமல் தடுக்க பாடசாலை மட்டத்தில் மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்