குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்தோம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples Samagi Jana Balawegaya UNP
By Sathangani Apr 08, 2024 03:09 AM GMT
Report

நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்தோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கண்டி அதிபர் மாளிகையில் நேற்று 07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : இன்று முதல் விடுவிக்கப்படவுள்ள பணம்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : இன்று முதல் விடுவிக்கப்படவுள்ள பணம்

அஸ்வெசும திட்டம்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க 

''பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது நாடாளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்தோம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு | Aswesuma Scheme Started For Sl Low Income People

நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள் என்றே கூற வேண்டும். இந்த வேலைத் திட்டங்களை தொடர நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்

சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்

ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது

பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்தோம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு | Aswesuma Scheme Started For Sl Low Income People

பொதுஜன பெரமுனவில் இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை.

நாட்டிற்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

நாட்டிற்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

20 இலட்சம் காணி உறுதிப் பத்திரம்

ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான், ஜே.ஆர் ஜயவர்தன (J. R. Jayewardene), ஆர், பிரேமதாச (Ranasinghe Premadasa), டி.பி. விஜேதுங்க (D.P Wijethunga) இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம். இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்தோம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு | Aswesuma Scheme Started For Sl Low Income People

இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது. நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.

20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும்.

எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.'' என்று அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மர்மமாக உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை: நால்வர் கைது

மர்மமாக உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை: நால்வர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025