அஸ்வெசும பயனாளிகளுக்கு நாளையதினம் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Sumithiran
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கும் கொடுப்பனவு
இதற்காக மொத்தம் 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்