மீண்டும் மின்சாரப் பிரச்சனை! எரிபொருள் நெருக்கடி அச்சத்தில் இலங்கையர்கள்
இலங்கையில் மீண்டும் மின்சாரக் குறைபாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விநியோகத்தைச் சுற்றியுள்ள வதந்திகள் காரணமாக சமீப நாட்களில் இந்த விவகாரம் அதிகம் பேசப்படுகிறது.
அரசு தரப்பின் தகவலின்படி, தற்போது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் அருகிலான கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்படுவதாக பொருளாதார ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சமீபத்தில் சில பகுதிகளில் எரிபொருள் நிலையங்களின் முன் வாகன வரிசைகள் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் இடையே “எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்” என்ற அச்சம் காரணமாக முன்கூட்டியே எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாற நிலையில் மேற்கண்ட விடயங்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 22 மணி நேரம் முன்