பிரித்தானியாவிலுள்ள புகலிடகோரிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
பிரித்தானியாவில் (uk) பொதுத்தேர்தல் முடியும்வரை, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிப்பதாக அமைந்துள்ளது.
ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழப்பாரானால்
இதேவேளை தேர்தல் முடிவுகள் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு பாதகமான முடிவுகளைக் கொடுக்குமானால், குறிப்பாக, ரிஷி சுனக்(rishi sunak) பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா (Rwanda) திட்டம் செயல்படாமலே போகவும் வாய்ப்புள்ளது.
ருவாண்டா திட்டமே ரத்து செய்யப்படும்
காரணம், தொழிற்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், ருவாண்டா திட்டமே ரத்து செய்யப்படும் என தொழிற்கட்சித் தலைவரான Keir Starmer தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் எதிர்வரும் யூலை மாதம் நான்காம் திகதி தேர்தல் நடத்தப்பட்டவுள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |