குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத புற்றுநோய் - ஆண்டு தோறும் 900 பேர் பாதிப்பு
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதுமாத்திரமல்லாமல் குறைந்தது 100 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் அதாவது, உடனடி உணவுகள், உலர் உணவுப்பயன்பாடு, கைப்பேசியில் மூழ்கியிருப்பதனால் விளையாட்டு மற்றும் உடற் செயற்பாடுகளில் ஈடுபடாமை, மேலும் பல காரணிகள் இந்த புள்ளிவிபரங்களிற்கு வழி சமைக்கின்றன என்றார்.
அதிகரித்துள்ள புள்ளிவிபரங்கள்
"ஒரு தசாப்தத்திற்கு முன்னர் காணப்படாத இத்தகைய புள்ளிவிவரங்கள் இன்று இப்படியிருப்பது எதிர்காலத்தில் இதைக்காட்டிலும் அதிகரித்திடும் அச்சத்தையும் இந்த புள்ளிவிபரங்கள் உண்டு பண்ணியிருக்கிறது" என்று தீபால் பெரேரா கூறினார்.
"இவ்வாறான அழிவுகளில் இருந்து நமது குழந்தைகளைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவுமுறைகளை பின்பற்றுவது மாத்திரமல்லாமல், துரித உணவுகளைத் தவிர்த்து, உடற் செயற்பாடுகளை அதிகரிப்பதன் வாயிலாக ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை நாம் உருவாக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
இதை தடுப்பதில் அனைவரிற்கும் பொறுப்பு உண்டு
இதற்கான பொறுப்பு வைத்தியர்களான எங்களுக்கு உள்ளதைப் போல பெற்றோர்கள் கையிலும் உள்ளது என்பதை அனைவரும் கருத்தில் கொண்டு செயற்படுவோம் என்று அவர் கூறியிருந்தார்.