கனடா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Ontario
Canada
World
By Raghav
கனடாவின் (Canada) - ஒன்றாரியோ (Ontario) மாகாண மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சில பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பொழிவு
பல்வேறு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் ஒன்றாரியோவின் பல இடங்களில் சுமார் 60 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும், 100 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் வீடுகளிலேயே இருப்பது மிகவும் உசிதமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி