ஆசியாவின் இரண்டாவது கோடீஸ்வரரின் திடீர் விஜயம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்
sri lanka
people
athani
By Shalini
இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர், கௌதம் அதானி தனிப்பட்ட விஜயமாகவே இலங்கை வந்தார். அவர் அரசாங்கத்தில் எவருடனும் பேச்சு நடத்தவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பதிரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கை வந்தது தொடர்பாகவும் கொழும்பு துறைமுக மேற்கு முனையம் பற்றி பேசவா அவர் வந்தார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
அதானி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டே இங்கு வந்தார். அவர் எந்த உடன்படிக்கையும் செய்யப்படவில்லை என பதிலளித்தார்.
எனினும் இலங்கை வந்திருந்த அவர் அரச தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்திருந்ததுடன், மன்னாருக்கு விஜயம் வெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.