நீதிமன்றம் சென்றார் அத்துரலியே ரதன தேரர்
case
Athuraliye Rathana Thero
membership
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana Thero) உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'எமது மக்கள் சக்தி' யின் தீர்மானத்துக்கு எதிராகவே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு 'எமது மக்கள் சக்தி' அண்மையில் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இதனால் கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டதுடன், அத்துரலியே ரதன தேரரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.