துருக்கிய படைகள் ஈராக்கில் நடத்திய திடீர் தாக்குதல்
Turkey
Iraq
World
By Dilakshan
துருக்கிய படைகள் ஈராக்கில் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கிய அரசுக்கு எதிராக 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற குர்தீஸ் தொழிலாளர்கள் கட்சி (பிகேகே) கிளர்ச்சி படைக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதன்போது, துருக்கி நடத்திய விமான குண்டு வீச்சு தாக்குதலில் நேற்று(08) மூலிகை பறிக்க சென்றவர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கிளர்ச்சி படை
இந்நிலையில், துருக்கிய படைகள் சில வேளைகளில் வடக்கு ஈராக்கில் எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அத்தோடு, குர்தீஸ் தொழிலாளர்கள் கட்சி (பிகேகே) கிளர்ச்சி படையினை துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்