அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது கொடூர தாக்குதல்!
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் மீது மோதுண்ட வாகனத்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்னர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறெனினும், இந்த சந்தேக நபர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நேரில் கண்ட சாட்சியாளர்கள் 9 முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர் எனவும் அவர்கள் மீது வாகனம் மோதுண்டது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த வாகனம் மக்கள் மீது மோதுண்டது என மேலும் சிலர் தெரிவித்துள்ளனர்.