யாழ் காவல் நிலையத்திற்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்! (படங்கள்)
Jaffna
Police station
Attack church
By MKkamshan
யாழ் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதலை நடாத்திய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கொட்டடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நிறைய மது போதையில் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்