ஆளில்லா விமான தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி: கடுமையாக எச்சரித்த பைடன்
Joe Biden
United States of America
Jordan
By Dhilak
ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமான தாக்குதல்
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களால் ஜோர்டான் நாட்டில் முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்