நாமலின் மக்கள் பேரணியில் சிறுவன் ஒருவனுக்கு நேர்ந்த கதி
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) மக்கள் சந்திப்பொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பாந்தோட்டை (Hambantota) - சிறிபோபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இந்த கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் தற்போது அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கல் தாக்குதலில் மயூரபுர ரோட்டரி வீதியில் வசிக்கும் சிறுவன் ஒருவரே காயமடைந்துள்ளார்.
இந்த மக்கள் சந்திப்பில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிலையில், சம்பவம் நடந்த போது அவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.
காயமடைந்த சிறுவனின் நலம் விசாரிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |