தப்பினார் ஞானசார தேரர்!!
நாட்டில் எந்த நேரத்திலும் மற்றுமொரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுத்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் (Galagoda aththe Gnanasara Thero) விசாரணை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் காவல்துறையினர் அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அகத் அல்விஸ் (Agath Alwis) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது நாட்டி மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவித்திருந்தார்.
இது அரசியலில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.
இதனை விசாரிக்க வேண்டும் என பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் சிறிலங்கா காவல்துறைமா அதிபர் திணைக்களத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.