ஹிருணிகாவின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை (Hirunika Premachandra) பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளார்.
இதனை சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றில் அறிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி
அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்தார்.
இதேவேளை எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறும் சட்டத்தரணி கோரினார்.
இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.
அத்துடன் பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |