சட்டமா அதிபர் பரிந்துவிடம் ஜேவிபிக்கு இல்லை பரிவு! கொதிநிலையும் முறுகலும் நடப்பதுதான் என்ன?
சிறிலங்காவின் சட்டமா அதிபரை மையப்படுத்தி ஒரு கொதிநிலை கயிறிழுப்பு அசாதாரணமாக நடப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்த கயிறிழுப்பில் முடிவு ஜனாதிபதி அநுர ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வந்து தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை அகற்ற முடிவு செய்தால் இந்த முடிவு சிஸ்ரம்; சேஞ் அரசாங்கம் என குறிப்பிடப்படும் அநுர தரப்பை வேறுவழியின்றிய முன்னைய ராஜபக்ச அதிகார மையத்தின் பழைய சிஸ்ரத்தை நினைவுபடுத்தத் தலைப்படும்.
ராஜபக்சக்களின் ஆட்சியில் அவர்களுக்கு பிடிக்காத உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவஙகள் இருந்தன.
இவ்வாறான சம்பவங்களின் எல்லாவற்றுக்கும் உச்சமாக 2013 இல் இதே ஜனவரியில் அப்போது சிறிலங்காவின் தலைமை நீதிபதியாக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவும் மகிந்தாவால் அதிர்ச்சிகரமாக பதவி நீக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அநுரவின் சிஸ்ரம்; சேஞ் அரசாங்கம் இவ்வாறு எல்லாம் செய்யாது என்ற கருத்து இருந்தாலும் தற்போதைய சட்டமா அதிபர் முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்பாக வழக்குகளில் இறுக்கமாக இல்லை.
மாறாக மென்மையாக இருப்பதன் விமர்சனம் அரச தரப்பில் உள்ள பின்னணியில் தான் அவரை மையப்படுத்திய ஆதரவு - எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைவதால் சிறிலங்காவின் சட்டமா அதிபர் விடயத்தில் என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகளை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |