சவூதியிடம் 51 பில்லியன் டொலர் இழப்பீடு கோரும் ஹவுதிகள்!... தாக்குதல்களை நிறுத்த நிபந்தனை
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு 51 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், யேமனின் அதிகாரபூர்வ ஆட்சியாளர்களாக ஹவுதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடலில் சவூதி எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாப் அல்-மண்டெப் நீரிணைக்கு அருகிலுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மொகா நகரை ஹவுதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை சவூதி முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி தலைமையிலான கூட்டணியின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் நீண்டகால முற்றுகையினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடாகவே 51 பில்லியன் டொலரை ஹவுதிகள் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி....! சட்டமா அதிபருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
ஹவுதிகளின் கோரிக்கை
மேலும், இந்தக் கோரிக்கையை சவூதி ஏற்றுக்கொண்டால், சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்துக்கான தனது ஆதரவை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ஹவுதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது எதிர்காலத்தில் மேலதிக நிதிக் கோரிக்கைகளுக்கும் புதிய தாக்குதல்களுக்கும் வழிவகுக்கலாம் என சவூதி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளதாகச் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, யேமனில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதும் சவூதிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தரைவழித் தாக்குதல்களை முன்னெடுப்பதன் மூலம் சவூதி இராணுவத்தினரின் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்பதுடன், உள்நாட்டிலும் எதிர்ப்புகள் உருவாகக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |