பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய அவுஸ்திரேலியா
கொரோனா பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தி உள்ளதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரும் டிசம்பர் 1ம் திகதி முதல் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர்.
இதன்படி வெளிநாட்டு மாணவர்கள் , திறன் வல்லுனர்கள் மற்றும் தகுதியுள்ள 'விசா' வைத்து உள்ளோர் அனைவரும் பயண விலக்கு கோரி விண்ணப்பிக்காமல் நேரடியாக அவுஸ்திரேலியா வரலாம்.
அவர்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும். அவுஸ்திரேலியா வந்து இறங்கியதும் அந்தந்த மாகாணங்களில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆஸ்திரேலியா விசா வைத்துள்ளோர் பயண விலக்கு கோராமல், தனிமைப்படுத்துதல் இன்றி வர அனுமதிக்கப்படுவர்.
இது தொடர்பாக கூடுதல் மாற்றங்கள் பின் அறிவிக்கப்படும்." தெரிவிக்கப்பட்டுள்ளது.