யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் தப்பிய ஆட்டோ சாரதி
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
நிழலுக்காக தங்கி நிற்பது வழமை
யாழ் பொது நூலகத்திற்கு முன்னாலுள்ள யாழ் மாநகர சபையின் சிறுவர் பூங்காவில் பாரிய பல மரங்கள் காணப்படுகின்றன. இந்த பூங்காவிற்குள் இருக்கின்ற மரங்களின் கீழ் வீதியால் செல்கின்ற பொது மக்களும் வாகனங்களின் சாரதிகள் பலரும் நிழலுக்காக தங்கி நிற்பது வழமையாக காணப்படும்.

இன்றைய தினமும் குறித்த மரத்தின் நிழல் பகுதியில் ஆட்டோவில் அதன் சாரதி தங்கி நின்றிருந்தார்.
மயிரிழையில் தப்பிய சாரதி
அப்போது அடித்த பலமான காற்றினால் நீண்ட கால பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. அங்கு நின்றிருந்த ஆட்டோவின் மேல் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆட்டோ முழுவதும் சேதமடைந்ததுடன் அதன் சாரதி காயங்களுடன் தப்பியுள்ளார்.
