யாழில் இடம்பெறவுள்ள விழிப்புணர்வு மரதன் விழா
Jaffna
Marathon
By Sathangani
யாழ்ப்பாணம் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ”ஆரோக்கிய சமூகமாய் வாழ்வோம் ” எனும் தொனிப்பொருளில் யாழில் விழப்புணர்வு மரதன் விழா இடம்பெறவுள்ளது.
இம்மாதம் 25 ஆம் திகதி (25.02.2024) காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 7.00 மணியளவில் முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு முன்றலில் ஆரம்பித்து வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தை வந்தடைந்து மரதன் ஓட்டப் போட்டி நிறைவடையும்.
இந்த மரதன் நிகழ்வில் சுமார் 100 பேர் பங்குபற்றுவதாக பதிவுகளை மேற்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரதன் விழாவின் இறுதியாக விழிப்புணர்வு வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் ஊடக சந்திப்பினையும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி