இலங்கை வர தயார்: கசிந்தது அசாத் மௌலானாவின் குரல் பதிவு
தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் என அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் (Hanzeer Azad Maulana) தெரிவித்துள்ளார்.
அசாத் மௌலானா ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக குரல்பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முன்னாள் மட்டக்களப்பு (Batticaloa) நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் (Joseph Pararajasingham) கொலைக்கு புலனாய்வு அதிகாரியாக இருந்த எம்.ஐ கலீல்தான் முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து எம்.ஐ கலீலை வெளிநாட்டுக்கு அனுப்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிள்ளையானால் (Pillayan) மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அவரும் பிள்ளையானும் துபாயில் ரோவினுடைய முக்கிய அதிகாகரிகளை சந்தித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அசாத் மௌலானா தெரிவித்த முக்கிய கருத்துக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடுத்த கட்டம், பிள்யைான் கைது மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
