அசாத் சாலிக்கு மாரடைப்பு! வைத்தியசாலையில் அனுமதி
sri lanka
people
asath sali
By Shalini
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் மார்ச் மாதம் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அசாத் சாலியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுளதாகவும் , தடுப்புக் காவலில் உள்ள அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படாது ஏதும் பாதிப்புக்கள் எற்படுமாக இருப்பின் அதற்கு சி.ஐ.டி.யினரே பொறுப்புக் கூற வேண்டும் என அவரது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்