2046 க்கு பின்னர் மனித குலம் இப்படி தான் இருக்கும்..! வைரலாகும் பாபா வங்காவின் கணிப்பு
2046க்கு பின்னர் மனித குலம் 100 வயதை கடந்தும் வாழும் என்றும் பாபா வங்கா கணித்து உள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.
அதாவது 2046 க்கு பின்னர் மனிதனின் ஆயுட்காலம் 100 வயது இருக்கும் எனவும் 100 வயது வரை மனிதர்கள் இயல்பாக வாழுவார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறிவியல்களின் வளர்ச்சியால் இது சாத்தியமாகும்
இதேவேளை, அறிவியல்களின் வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகளால் இது சாத்தியமாகும் என அவர் விளக்கமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாபா வங்காவின் குறித்த கணிப்பு தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கணிப்பு எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை இருப்பினும் பாபா வங்காவின் 85 சதவீதமான கணிப்புகள் பலித்துள்ளமையால் இணையம் முழுவதும் அவரது இந்த கணிப்பும் வைரலாகி வருகின்றது.
உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவர்
பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார்.
1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார். அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பின்னர் நடக்கவிருக்கும் உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே கூறியுள்ளார்.
கொரோனா தொற்று நோய், இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விடயங்கள் இவர் முன்கூட்டியே கணித்து உள்ளதாக அவரது சீடர்கள் தெரிவித்துள்ளனர்.
கண் பார்வையற்றவர்
பாபா வங்கா 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயலில் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோனது.
அதேவேளை, புயலில் சிக்கிய போது அவருக்கு ஒரு அமானுஷ்ய சக்தி வந்ததாகவும் அதன் பிறகு அவர் மக்களைப் பற்றியும், எதிர்கால உலக நடப்புகளைப் பற்றியும் சரியாகக் கணித்துக் கூறினார் என்றும் அவரது சீடர்கள் கூறுகிறார்கள்.
அவர் கணித்ததாக கூறப்படும் நிகழ்வுகள் அனைத்தும் அவருடைய உதவியாளர்களால் தொகுக்கப்பட்டவை. பிறகு அவை பல்வேறு நூல்களாக வெளிவந்தன.
அந்தக் கணித்தல்கள் பல அவர் மறைவுக்கு பிறகு வெளியானவையாகும் இவர் இன்னும் 5000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளை கணித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எதிர்காலத்தை கணித்ததாக குறிப்பிடப்படும் பாபா வங்காவின் வாசகங்களுக்கு சிலர் ஆதரவாகவும் சிலர் பொய்யானவை என்றும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
