நகரப்போகும் 2025 இல் ஏற்படபோகும் பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புக்கள்
2025 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வாங்காவின் பலதரப்பட்ட கணிப்புகள் அண்மை நாட்களாக வெளியாகி வருகின்றது.
பாபா வாங்கா 1911 ஆம் பிறந்தவர் என்பதுடன் இவர் சிறுவயதில் புயல் ஒன்றில் சிக்கி அவருடைய கண் பார்வையை இழந்தார்.
பாபா வங்கா பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்ட நிலையில், இவர் 1996 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மரணமடைந்தார்.
அதிர்ச்சியூட்டும் கணிப்பு
இந்தநிலையில், இவர் மரணிப்பதற்கு முன்பு பிற்காலத்தில் பூமியில் நடக்கும் விடயங்களைக் குறித்து அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வைத்துச் சென்ற நிலையில், இது தற்போது வரை பேசப்பட்டும் நம்பிக்கைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றது.
இதில், சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ள நிலையில் பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததால், மக்கள் மத்தியில் பிரபலமான தீர்க்கதரசியாகவும் காணப்படுகின்றார்.
இதனடிப்படையில், இவர் 2025 ஆம் ஆண்டு குறித்து கணித்துள்ள கணிப்பு குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- இந்த ஆண்டில் ஐரோப்பா கடுமையான உள் சண்டையை சந்திக்கக்கூடுவதாகவும், இதனால் மக்கள் தொகை குறைப்பு மற்றும் பிராந்திய அழிவு ஏற்படுமாம்.
- 2025 ஆம் ஆண்டில் மருத்துவம் மற்றும் அறிவியல் முன்னேற்றம் அசுர வளர்ச்சியை அடையும் என தெரிவித்துள்ளார்.
- அதாவது செயற்கையாக உடல் உறுப்புகளை உருவாக்கி மக்களின் ஆயுள் காலத்தினை அதிகரிக்க முயற்சி நடக்கும்.
- புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கு அறிவியல் மற்றும் மருத்துவத்தில் மூலம் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.
- மனிதர்கள் டெலிபதியாக மாறக்கூடும் என்றும் இதனால் மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை வெகுவாக மாற்றும் என்று கணித்துள்ளார்.
- டெலிபதி என்பது மக்கள் எவ்வளவு தூரம் இருந்தாலும் ஒருவொருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியுமாம்.
- வேற்று கிரக வாசிகளுடன் மனிதர்கள் தொடர்பில் இருப்பார்கள் அத்தோடு வேற்கு கிரக நிகழ்வுகளுடன் அனுபவங்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர் நிகழ்வுகள்
இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் பேரழிவுகளின் தொடர் நிகழ்வுகள் தொடங்கக்கூடும் எனவும் அவர் அதை பேரழிவின் ஆரம்பம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மனிதகுலம் முற்றிலுமாக அழிக்கப்படாவிட்டாலும், இந்தக் காலகட்டம் உலகளாவிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிரமங்களைக் குறிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்