மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டம்: 23 பேர் பலி!
Badulla
Weather
Rain
By Kanooshiya
நாட்டை பாதித்துள்ள மிகவும் மோசமான வானிலையால் பதுளை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் பதுளை மாவட்டத்தில் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஸ்தம்பிதம்
மேலும், 11 பேர் காயமடைந்துள்ளதுடன் 25 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நாட்டில் சுமார் 55 வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்