ஈரான் புரட்சிகர படையுடன் தொடர்பு : 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது பஹ்ரைன்
Iran
Bahrain
Iran-US Conflict
By Jaso
ஈரானுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்க பஹ்ரைன் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து பஹ்ரைனில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக அந்த 9 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பஹ்ரைன் காவல்துறையினரால் கைது
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து, மார்ச் மாதம் பஹ்ரைன் காவல்துறையினரால் அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பஹ்ரைனின் பொருளாதார மையங்கள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்ட மிகவும் இரகசியமான தகவல்களை அவர்கள் ஈரானுக்கு வழங்கியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி