பம்பலப்பிட்டியில் கோர விபத்து: தொடருந்து மோதி இளைஞன் பலி
Colombo
Accident
Death
By Shadhu Shanker
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் தொடருந்தில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞரின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
எனவே குறித்த விபத்துதொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்