யாழ் இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட தடை
யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி இளைஞர்கள் பறப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தடையை யாழ்ப்பாண காவல்துறையினர் நேற்று(18) விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாண இளைஞர்கள் காத்தாடி கயிற்றில் தொங்கி வானில் பறந்து வீரத்தை வெளிப்படுத்துவது இன்றைய நாட்களில் பிரபல்யமான நிகழ்வாக மாறியுள்ளது.
கைது நடவடிக்கை
இவ்வாறான சம்பவங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகளை குறைக்கும் வகையில் காவல்துறையினர் இந்த தடையை விதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பட்டமொன்றின் கயிற்றில் தொங்கி வானத்தில் 30 அடி உயரம் வரை சென்று தனது திறமையை வெளிப்படுத்தும் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அதன் பின்னரே காவல்துறையினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |